பிரெஞ்ச் ஓபனிலிருந்து விலகினார் பெடரர்!

முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுவிஸ் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இம்முறை பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வலது முழங்காலில் ‘ஆர்த்தோஸ்கோபிக்’ அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் பிரெஞ்ச் ஓபன் உட்பட அனைத்து களிமண் தரை டென்னிஸ் தொடர்களிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்

டுபாய் ஓபன், இந்தியன் வெல்ஸ், போகோடா, மியாமி மற்றும் பிரெஞ்ச் ஓபனில் அவரது ரசிகர்கள் பெடரரின் சுழலும் மட்டையைக் காண முடியாது.

பொதுவாக களிமண் தரையில் பெடரரின் ஆட்டம் அவ்வளவாக சோபித்ததில்லை. பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஒரேயொரு முறைதான் வென்றுள்ளார். ஆனால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 8 முறையும், அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 5 முறையும், அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 6 முறையும் வென்றுள்ளார். இவை அனைத்தையும் தொடர்ச்சியாக வென்றுள்ளதும் ஒரு அரிய சாதனையாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here