பிரபஞ்ச அழகிப் போட்டி: வரலாறு படைத்த திருநங்கை!

பிரபஞ்ச அழகி (Miss Universe) போட்டியில் கலந்து கொண்ட 26 வயதான ஏஞ்சலா போன்ஸ், மிஸ் யுனிவர்ஸ் ஸ்பெயின் பட்டத்தை வென்று பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கு பெறும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்ட ஜென்னா டலாகோவா, என்ற திருநங்கை சில காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் பிரபஞ்ச அழகிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பவர் ஸ்பெயின் அழகி ஏஞ்சலா போன்ஸ். இவர் விரைவில் உலக பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஸ்பெய்னை பிரநிதிக்க உள்ளார்.

வெற்றி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறந்த பேச்சாளராக வேண்டும் என்பதே என் கனவு. அதன் மூலம் எங்கள் திருநங்கை சமுதாயத்தைப் பற்றி மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த உலகத்துக்கும் தனிமைப்படுத்துதலின் விளைவு, மரியாதையின் முக்கியத்துவம், பன்முகத் தன்மையின் ஆபத்து போன்றவற்றைப் பற்றி எடுத்துக் கூறி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவேன் எனப் பதிவு செய்துள்ளார்.

வரலாற்றில் முதன் முறையாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்காக ஒரு திருநங்கை தேர்வாகியிருப்பது உலகளவில் திருநங்கைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here