kன்னார் பிரிமீயர் லீக்: தமிழ்ஸ் எப்.சியை வீழ்த்தியது ஐலன்ட் எப்.சி

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 4 ஆம் நாள் போட்டிகள் நேற்று புதன் கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் நடைபெற்றது.

இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், மன்னார் பிரிமீயர் லீக் போட்டியின் குழு தலைவருமான பி.ஞானராஜ் தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.

குறித்த உதைபந்தாட்ட போட்டியானது மன்னார் தமிழ்ஸ் எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும் ஐலன்ட் எப்.சி உதைபந்தாட்ட அணிக்கும் இடையில் போட்டி இடம் பெற்றது.

போட்டி ஆரம்பமாகி 6வது நிமிடத்தில் ஐலன்ட் எப்.சி வீரர் அன்று டிலக்ஸன் கோலடித்தார்.

போட்டி முடியும் வரை மேலதிக எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இரண்ட அணிகளும் கோலடிக்க பிரயத்தனப்பட்டதால் போட்டி மிக விறுவிறுப்பாக நடந்தது.

இறுதியில் ஐலன்ட் எப்.சி அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here