மைத்திரி அதிரடி: எரிபொருள் விலையேற்றம் நிறுத்தப்பட்டது!

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய இந்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது பழைய விலைக்கே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சினால் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் இன்று காலையில் அந்த விலை அதிகரிப்பை இடை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here