சனி மாற்றத்தால் கணவனை வீட்டு சிறையில் வைத்த மனைவி

சனி மாற்றத்தால் கணவனை நான்கு மணி நேரம் வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சியில் சனி மாற்ற விடயத்தை அறிந்து கொண்டதுமே, இந்த வீட்டு சிறை சம்பவம் நடந்துள்ளது.

கணவர் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் ஒருவராகும். அவர் தனது தொழிலுக்காக அம்பலன்கொட துறைமுகத்திற்கு காலை நேரத்தில் சென்றுள்ளார். அவர் சென்ற சற்று நேரத்தில் தொலைகாட்சியில், அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் சனி மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டதனை அவதானித்த மனைவி, உடனடியாக கணவனை தொலைபேசியில் அழைத்துள்ளார். உடனடியாக வீட்டுக்கு வருமாறு கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

தகவல் ஒன்றும் அறியாமல் கணவர் அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார். கணவன் வீட்டுக்கு வந்தவுடன் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகள் அனைத்தையும் அவர் பூட்டியுள்ளார். ஒன்றும் புரியாமல் நின்ற கணவர் என்ன பிரச்சினை என மனைவியிடம் கேட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 12.30க்கு சனி மாற்றம் ஏற்படவுள்ளது. உங்களுக்கும் சனி உள்ளது. அதனால் 2.30 வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.

செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலே விட்டு வந்தமையால் கணவர் வெளியே செல்ல வேண்டும் என கூறிய போதிலும், கணவனை வீட்டுக்குள் பூட்டிவிட்டு மனைவி சாவிகளை மறைத்துள்ளார்.

பின்னர் இந்த சனி மாற்றம் தொடர்பில் தொலைகாட்சியில் என்ன கூறுகின்றார்கள் என பார்த்த கணவர் கடும் கோபமடைந்துள்ளார். பிற்பகல் 12.30 மணிக்கு சனி மாற்றம் என்ற பெயரில் ஒரு படம் ஒளிபரப்பப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த கணவர், மனைவியை கடுமையாகத் திட்டிவிட்டு மீண்டும் தொழிலுக்குச் சென்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here