உடுவிலில் காதலால் அடிதடி!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுகுட்பட்ட உடுவில் மல்வம் பகுதியில் உள்ள 3 வீடுகளுக்குள் நேற்றிரவு புகுந்த ரௌடிக் கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுள்ளது. ஆவா குழு பாணியிலேயே ரௌடிகள் நடந்து கொண்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

“3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட கும்பல் வீடுகளுக்குள் புகுந்தது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். நீளமான வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளை அவர்கள் வைத்திருந்தனர்” என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“வீடு ஒன்றின் வளவுக்குள் புகுந்து கும்பல், முற்றத்தில் நிறுத்திவைக்க்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அடித்து சேதப்படுத்தியது. அந்த வீட்டுக்குள்ளிலிருந்த கதிரைகள், யன்னல் கண்ணாடி போன்றவற்றை அடித்து உடைத்தது தப்பி சென்று விட்டது”முறைப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கும்பலுக்கும் குடும்பம் ஒன்றுக்கும் இடையே நீடித்த காதல் விவகாரத்தால் எழுந்த முரணபாட்டை அடுத்தே இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது. சம்வத்தையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டனர். ஆவா குழு அல்ல. அவர்களின் பாணியில் வேறு ஒரு கும்பல் இதனைச் செய்துள்ளது” என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here