‘மகாநாயக்கர்களின் கதவு ரிசாத்திற்கு அடைக்கப்பட்டுள்ளன’: சந்திப்பு கோரிக்கையை நிராகரித்தனர்!

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன், மகாநாயக்க தேரர்களை சந்திக்க மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. ரிசாத்தை சந்திப்பதை தவிர்த்த மகாநாயக்கர்கள், “ரிசாத்துக்கு மகாநாயக்கர்களின் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன“ என தெரிவித்துள்ளனர் என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.

தெற்கு அரசியலிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் ரிசாத் எதிர்ப்பு மனநிலை வளர்க்கப்பட்டு வரும் நிலையில், தனது தரப்பு நிலைப்பாடுகளை மகாநாயக்கர்களை சந்தித்து தெரிவிக்க, ரிசாத் தரப்பு தீவிர முயற்சி மேற்கொண்டது.

மல்வத்து, அஸ்கிரிய பீடம் ஆகியவற்றை சந்திப்பதற் ரிசாத் நேரடியாக முயற்சி மேற்கொண்டிருந்தார். எனினும், அது வெற்றியளிக்காத நிலையில், முக்கிய சிங்கள பிரமுகர் ஒருவர் ஊடாக மகாநாயக்கர்களை சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் இந்த சந்திப்பு கோரிக்கையை நிராகரித்து விட்டன. “ரிசாத் பதியுதீனுக்கு மகாநாயக்கர்களின் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன“ என அந்த தரப்புக்களிற்கு கூறப்பட்டதாக தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here