விஸ்வாசம் பற்றி பரவும் வதந்தி: முற்று புள்ளி வைத்த நடிகை!

தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் தல அஜித் அப்பா மகன் என டபுள் ரோலில் நடிக்க இருப்பதாகவும் அப்பா அஜித்திற்கு ஜோடியாக காலா படத்தில் சூப்பர் ஸ்டார் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

ஆனால் தற்போது இது வதந்தி என முற்று புள்ளி வைத்துள்ளார் ஈஸ்வரி ராவ். இந்த தகவல் குறித்து பிரபல செய்தி நிறுவனம் ஈஸ்வரி ராவை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளது. அப்போது நான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை. என்னை நடிக்க கூறி படக்குழுவினரும் அணுகவில்லை என பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பாலா இயக்கத்தில் உருவாக உள்ள அர்ஜுன் ரெட்டி படத்தின் ரி-மேக் படமான வர்மா படத்தில் தான் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here