4000 வருட மர்மத்தை துலக்கியது அமெரிக்க புலனாய்வு அமைப்பு!

எகிப்து பிரமிட் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த மண்டை ஓடு சரியாக 103 வருடங்களுக்கு முன்பு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 4000 வருடம் பழமையானது என்று கூறப்படுகிறது.

இந்த மண்டையோடு கடந்த 1915ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த தலை யாருடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த சமாதி ”ஜேஹுடிநாஹ்ட்” என்ற எகிப்து கவர்னருக்கு சொந்தமானது. இதனால் அவரின் குடும்பத்தை சேர்ந்த யாராவது 4000 வருடங்களுக்கு முன்பு இறந்து போய் இருக்கலாம் அவர்களின் தலையாக இது இருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் இதை வைத்து, எந்த விதமான ஆராய்ச்சி செய்தும் கூட தலை யாருடையது என்று கண்டிபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த தலை மோசமாக உடைந்து இருந்தது. சிறு ரத்த செல்கள் கூட இதில் காணப்படவில்லை. இது ஆணா, பெண்ணா என்று கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த மண்டை ஓட்டை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ வாங்கியது. அவர்கள் இதில் கடந்த ஐந்து வருடமாக சோதனை செய்தார்கள். அந்த மண்டை ஓட்டில் இருந்து பல் ஒன்றை எடுத்து அதை பல்வேறு ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். இதன் மூலம் நிறைய வரலாற்று தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

சரியாக 103 வருடத்திற்கு பின் இந்த 4000 வருட மர்மம் வெளியே வந்துள்ளது. இந்த தலை முதலில் ஜேஹுடிநாஹ்டின் மனைவியுடையது என்று கூறப்பட்டது. தற்போது இந்த தலையே கவர்னர் ஜேஹுடிநாஹ்டின் தலைதான் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை வைத்து இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய இருக்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here