20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகம்

20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகத்தை மக்கள் விடுதலை முன்னணி அட்டன் நகரில் 05.07.2018 அன்று மதியம் அட்டனில் முன்னெடுத்தது.

அட்டன் நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆலமர சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த துண்டு பிரசுர விநியோகம் அட்டன் நகரில் கடைகள், தொழில் நிலையங்கள் என பல இடங்களுக்கும் நகருக்கு வருகை தந்த பொது மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இந்த துண்டுபிரசுரத்தினை விநியோகித்தமை குறிப்பிடதக்கது.

விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் “நாகரீகமான சமூகத்திற்காக எதேச்சதிகார நிறைவேற்று முறையை தோற்கடிப்போம், ஜனநாயகத்திற்காக போராடுவோம், 20வது திருத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்” போன்ற வசனங்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here