மார்ச் 2 இல் நாடாளுமன்றம் கலைப்பு: ஏப்ரல் 25 தேர்தல்!

நாடாளுமன்றத்தை மார்ச் 2ம் திகதி கலைப்பதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும்.

வேட்புமனுக்கள் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும்.

நாடாமன்றம் மார்ச்சில் கலைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல், தேர்தல் நடத்தும் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும் திகதி குறித்து, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம், ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய விரைவில் இதற்கு பதிலளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து கலைப்பது குறித்து சட்டமா அதிபரிடம், ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை கோரியிருந்தார். 19வது திருத்தத்தின்படி, மார்ச் 1ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கலாமென சட்டமா அதிபர் தப்புல டி லிவேர ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே, நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதி குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்ய முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here