கிளிநொச்சி சிந்தனையாளர் வட்டத்தினர் பிரதி பொலீஸ்மா அதிபரை சந்தித்து கலந்துரையாடல்

கிளிநொச்சி சிந்தனையாளர் வட்டத்தின் பிரதிநிதிகள் நேற்று(16) கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலீஸ்மா எச்ஏஎன்கே. தமிந்த விஜயசிறியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை பத்து மணிக்கு குறித்த சந்தப்பு இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலீஸ்மா அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் சமீபகாலமாக பொலீஸார் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்த சிந்தனையாளர் வட்டத்தினர்.

மாவட்டத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் கடத்தல், மரம் வெட்டுதல், கசிப்பு, கஞ்சா, குழு மோதல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இளைஞர்களின் விதிமுறைகளை மீறிய போக்குவரத்து செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான அனைத்து செயற்பாடுகளையும், கட்டுப்படுத்துவது, மற்றும் பொது மக்கள் இளைஞர்கள், மாணவர்களுக்கு வழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைளை மேற்கொள்வது பற்றியும் கலந்துரையாடினர்.

பொலீஸார் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கிடையே சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் பரஸ்பர ஒத்துழைப்பு பற்றியும் பேசப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ் மா அதிபர் தனக்கு சில மாதங்கள் கால அவகாசம் தருமாறு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்த அவர் சுற்று சூழல் பாதுகாப்பு விடயத்தில் தான் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here