“என் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா”: நடிகை அமலாபால் விளக்கம்


நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் காதலித்து திருமணம் செய்துகொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தனுஷ் தனது படத்தில் அமலாபாலை நடிக்க வைத்ததால் திருமணம் முறிந்ததாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அமலாபால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கேள்வி: நீங்கள் விவாகரத்து செய்வதற்கு தனுஷ்தான் காரணம் என்ற செய்தியில் உண்மை இருக்கிறதா?

பதில்: எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது வந்து கேட்கிறீர்கள். எனது விவாகரத்து சர்ச்சை தேவை இல்லாதது. அது எனது சொந்த விஷயம். விவாகரத்து வாங்கிய முடிவு முழுக்க என்னுடையதுதான். அதற்கு வேறு யாரும் பொறுப்போ காரணமோ இல்லை. வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா?

தனுஷ் எனது நலம் விரும்பி. இந்த விஷயத்தில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள். இதை விட அதிகமாக பேசவும் நான் விரும்பவில்லை.

கேள்வி: மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீங்கள் விலக காரணம் என்ன?

பதில்: எல்லா கதாபாத்திரத்தையும் எல்லோரும் செய்ய முடியாது. மணிரத்னம் படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என்று தோன்றியது. நான் பொருத்தமாகவும் இருக்க மாட்டேன். அதனால் விலகினேன்.

கேள்வி: நீங்கள் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொன்னீர்கள்? திருமணம் எப்போது?

பதில்: அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எனது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு எனது காதலை பற்றி சொன்னமாதிரி திருமணத்தை பற்றியும் அறிவிப்பேன்” இவ்வாறு அமலாபால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here