முள்ளிவாய்க்காலில் பௌத்த மதத்தின் நற்பண்புகளிற்கு ஏற்ப மக்களை மீட்ட சவேந்திர சில்வாவிற்கு இந்தக் கதியா?

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத்தடை உத்தரவு, அனைத்து இலங்கையர் மீதான தேவையற்ற செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கையென்றும், நாட்டு மக்கள் இன, மத, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து அதற்கு எதிராக நிற்க வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் பிரதான பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையுடன் செய்துகொள்ள திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை தற்போதைய அரசின் காலத்தில் அவர்களால் செயற்படுத்தமுடியவில்லை என்பதால் அமெரிக்கா இந்த வகையான முடிவுகளை எடுக்கிறதா என்பது சந்தேகத்தை உருவாக்குகிறது” என்றார்.

“பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர், அதனால் கிடைத்த அமைதியை இலங்கை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதில் வருந்தத்தக்கமு. பயங்கரவாதத்தின் தோல்விக்கு பங்களித்த ஒரு தலைவருடன் அமெரிக்கா இவ்வாறு நடந்து கொள்கிறது.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் மனிதாபிமான நடவடிக்கையின் கடைசி கட்டத்தில் அப்பாவி தமிழ் குடிமக்களை கேடயமாகப் பயன்படுத்தினர். பௌத்த மதத்தில் கற்பிக்கப்பட்ட இரக்கம் மற்றும் நற்பண்புகளுக்கு ஏற்ப அரசாங்கப் படைகள் பொதுமக்களை தீங்குகளிலிருந்து காப்பாற்றினர். எங்களால் காட்டப்படும் மனிதாபிமான அனுதாபங்களை புறக்கணித்து, நாட்டிற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா எழுப்புகிறது. இதைப் பற்றி நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

இன, மத மற்றும் கட்சி வேறுபாடுகளை நாம் மறந்து, ஒரு நாடாக ஒன்றாக இருப்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று தம்மநந்த தேரர் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here