ஐ.பி.எல் அட்டவணை: சி.எஸ்.கே- மும்பை முதல் போட்டியில் மோதல்!

8 அணிகள் பங்கேற்கும் 13வது ஐ.பி.எல். ரி20 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 29ம் திகதி ஐ.பி.எல் திருவிழா தொடங்குகிறது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக்கில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் சந்தித்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 30ம் திகதி நடக்கும் 2வது லீக்கில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.

6 நாட்களில் அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இரண்டு ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்த முறை இரட்டை ஆட்டங்கள் கிடையாது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. லீக் சுற்று அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம், அணியின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் போட்டி அட்டவணை கசிந்துள்ளது. இறுதிப்போட்டி மே 24ம் திகதி நடக்கிறது.

நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ், டெல்லி கபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 60 போட்டிகள் நடக்க உள்ளன.

முதல் போட்டி வரும் மார்ச் 29ம் திகதி மும்பையில் வான்ஹடே மைதானத்தில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடக்கிறது.

சிஎஸ்கே அணி 2வது ஆட்டத்தில் ஏப்ரல் 2ம் திகதி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஏப்ரல் 6ம் திகதி நடக்கும் 3வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுன் சிஎஸ்கே விளையாடுகிறது.

ஏப்ரல் 11ம் திகதி கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடனும், ஏப்ரல் 13ம் திகதி டெல்லி கபிடல்ஸ் அணியுடனும் சிஎஸ்கே அணி மோதுகிறது

17ம் திகதி பஞ்சாப் அணியுடனும், 19ம் திகதி சன்ரைசர்ஸ் அணியுடனும், 24ம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியையும் சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

27ம் திகதி நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடனும், 30ம் திகதி சன்ரைசர்ஸ் அணியுடனும், மே 4ம் திகதி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனும் சிஎஸ்கே அணி மோதுகிறது

மே 7ம் திகதி கொல்கத்தா அணியுடனும், 10ம் திகதி டெல்லி கபிடல்ஸ் அணியுடனும்,14ம் திகதி ஆர்சிபி அணியுடனும் சிஎஸ்கே அணி விளையாடுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here