இரண்டு சிறுமிகள், யுவதி சீரழிப்பு: யுவதி, சிறுமியின் தந்தையே குற்றவாளிகள்!!

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த உறவினர் ஓருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை
சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து அவருடைய தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வன்புணர்வு குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஓருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையையடுத்து குறித்த சிறுமியின் தந்தையான 39 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here