UPDATE: நான் பகிடிவதைக்கு உள்ளாகவில்லை: யாழ் பல்கலைகழக மாணவன் மறுப்பு!

பகிடிவதைக்கு இலக்காகி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தியை, யாழ் பல்கலைகழக மாணவன் மறுத்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீட வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பகிடிவதை சம்பவம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள மாணவ பிரதிநிதியொருவரால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளை கலைப்பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

பகிடிவதைக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்ட மாணவன் அந்த சம்பவத்தை மறுத்துள்ளார். அப்படியொரு சம்பவம் நடக்கவில்லையென்றும், நடந்த சம்பவம் தவறாக திரிவுபடுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here