கனடியர்களிடம் மோசடி செய்த தம்பதி சிக்கியது!

இணையத்தளம், மற்றும் தொலைபேசி வழியான பணமோசடி குற்றச்சாட்டில் ஒன்ராறியோவைச் சேர்ந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை தளமாகக் கொண்ட தொலைபேசி மற்றும் இணைய மோசடியில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் பரவலான மோசடியில் ஈடுபட்டிருக்கலாமென கனடிய வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, இந்த மோசடியில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வரிசெலுத்த வேண்டியவர்களை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவை தளமான கொண்ட ஒரு இணையத்தளத்தின் மூலம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்காக கனடிய தம்பதி பணத்தை பெற்று, இந்தியாவிலுள்ள மோசடி தளமொன்றிற்கு பரிமாற்றம் செய்து வந்துள்ளனர். இவர்கள் மோசடி செய்த பணத்தின் முழுமையான விபரம் வெளியாகவில்லை. எனினும், இவர்கள் கைது செய்யப்பட்டபோது 27,000 டொலர் பணம் மற்றும் 100,000 டொலருக்கும் அதிக பெறுமதியுடைய நகைகள் அவர்களின் பிரம்டன் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here