திருமணத்திற்கு முன்னர் டேட்டிங் போகலாமா?


இந்த சொல்லை கேட்டாலே அடடா தப்பு தப்பு என்று சொல்பவர்கள் தான் நமது சமூகம். மறைவில் செய்தால் தப்பில்லை வெளிப்படையாக ஒரு சொல்லை பேசுவதற்கு தப்பு சொல்லும் சமூகத்தவர்கள் இன்னமும் உள்ளனர். ஆனால் அவை தான் எமது வாழ்க்கையின் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். டேட்டிங் என்றால் தவறாக கருதி வைத்துள்ளோம். அது திருமணத்தின் முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பதற்கும் தம்மை ஒருரை ஒருவர் புரிந்து கொள்வதற்குமான ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பினை பெற்றோர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இல்லை பிள்ளைகள் தாமாக ஏற்படுத்தி கொண்டாலும் அதனை கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும். காரணம் ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன்னரே புரிந்து கொண்டு தமது புது வாழ்வை சந்தோசமாக தொடர்வதற்கான ஒரு சந்தர்ப்பமே டேட்டிங்.

இதனை திருமணத்திற்கு முன்பே கா? என்று சிலர் வியப்பாக பார்க்கலாம்.

டேட்டிங் என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கானதல்ல ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள தெரிந்து கொள்ள ஒதுக்கப்படும் நேரம் என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்ள டேட்டிங் என்பது தேவையானது தான். டேட்டிங் என்றவுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமான காடு பத்தைக்கு போவதல்ல கோவிலுக்கு சென்று அருகில் உள்ள இடங்களுக்கு கூட போய் வரலாம். அல்லது சின்ன சுற்றலாவை அமைத்து கொள்ளலாம். அது தனியாக தான் என்றில்லை. பெற்றோர்களையும் அழைத்து கொண்டு செல்லலாம். இரு குடும்பத்தார்களையும் அழைத்த கொண்டு செல்கையில் திருமணம் செய்யப் போபவர்கள் மட்டுமின்றி இரு புதிய குடும்பங்களுக்கிடையிலும் ஒரு புரிந்துணர்வு ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன.

திருமண பந்தத்தை தொடங்குவதற்கு முன்னரே மனம் திறந்து பேசுவதற்கான ஓர் நேரமாக இது அமைகிறது. இதனால் இல்லறத்தின் ஆரம்ப நாட்களிலேயே நீங்கள் புரிதலோடு வாழ்க்கையை ஆரம்பிக்கவும் முடியும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம்

இந்த வாய்ப்பு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஓர் கருவியாக அமைகிறது. உங்கள் குணாதிசயங்கள் என்ன? நீங்கள் எப்படிப்பட்டவர்கள் உங்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் கையாள வேண்டும் என்று இந்த நேரத்தின் மூலமாக புரிந்துக் கொள்ள முடியும்.

பிடித்தது பிடிக்காதது

மேலும் இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது. இதில் உங்கள் இருவருக்கும் பிடித்த பிடிக்காத பொதுவானவை என்னென்ன உங்களுக்கு பிடித்த அவருக்கு பிடிக்காமல் இருக்கும் விஷயங்கள் என்னென்ன என்றெல்லாம் தெரிந்துக் கொள்ளலாம்.

எதிர்பார்ப்புகள்

மேலும் ஒருவரிடம் மற்றொருவர் உறவு ரீதியாக என்ன எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார் நீங்கள் அவருக்கு எப்படிப்பட்ட துணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துக் கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

சுவாரஸ்யங்கள்

நீங்கள் முதன் முதலில் அவருடன் வெளியில் சென்று வரும் போது அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். உங்கள் வாழ்நாளின் கடைசி வரை இது உங்கள் மனதைவிட்டு மறையாத ஒன்றாய் இருக்கும்.

நினைவுகள் பகிர்ந்துக் கொள்ளுதல்

உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி நீங்கள் பகிர்ந்துக் கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

குடும்ப வரலாறு

திருமணத்திற்கு பிறகு வந்து ஒவ்வொருவர் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக் கொல்வதற்கு பதிலாக திருமணமான மறுநாளே உங்கள் துணையின் குடும்பத்தை பற்றி மொத்தமாக தெரிந்துக் கொள்ள அவர்களது குடும்பத்தை பற்றிய புரிதல் ஏற்பட இதுவொரு நல்ல வாய்ப்பாக இருக்கும். எனவே திருமணத்திற்கு முன்னர் இருவரும் மனம் விட்டு பேச சிறந்த வாய்ப்பான டேட்டிங்கை அனைவரும் கையில் எடுத்து கொள்வது. அவர்களுக்கிடையில் சிறந்த புரிந்தணர்வை ஏற்படுத்தும் எனலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here