தென்னை மயிர்க்கொட்டியும், அதனைக் கட்டுப்படுத்தலும்


விஞ்ஞானப் பெயர் : Opisina arenasella walker

இவ் தென்னை மயிர்க்கொட்டியானது “நெபன்ரிஸ் செரினோபா” என முன்பு அழைக்கப்பட்டும். தற்சமயம் இவ் மயிர்க் கொட்டியினை “ஒபிசினா அரினோசெல்லா” எனவும் அழைப்பார். இது தென்னையைத் தாக்கும் உக்கிரமான பீடை ஆகும். இப் பீடை வரண்ட வலயத்திலும், இந் நாட்டின் தென்னை வளரும் பிரதேசங்களிலும் பரவிக் காணப்படுகின்றது.

குறிப்பாக பெப்ரவரி தொடக்கம் ஒக்டோபர் மாதங்களுக்கிடையில் இதன் திடீர் பரவுகை நிகழ்கின்றது. இதனால் ஏற்படும் பரந்த ஓலைச் சேதத்தினால் விளைச்சலில் இழப்பினை ஏற்படுத்துகின்றது.

சேதத்தின் தன்மையும் இனம் காணலும்.

• சிற்றோலைகளில் காணப்படும் காய்ந்த பகுதி மூலம் தாக்கப்பட்ட மரங்களை இலகுவில் அடையாளம் காணலாம். சிற்றோலையின் கீழ்ப்புறத்தில் காணப்படும் அறை போன்ற அமைப்புக்குள் குடம்பி அல்லது மயிர்க் கொட்டிகள் காணப்படும் இவ் குழாய் போன்ற அறைகளானது குடம்பியினால் வெளியேற்றப்படும் சிற்றிலை இழைய சிறு துண்டுகளினால் உருவாக்கப்பட்டு அதனுள் குடம்பிகள் பாதுகாப்பாக இருந்து சிற்றிலைகளின் கீழ்ப்பக்க இழையங்களை அரித்து உணவாக உட்கொள்கின்றன. ஒவ்வொரு பருவத்திலுள்ள குடம்பிகளும், கூட்டுப்புழுக்களும் மற்றும் வளர்ந்த அத்துப் பூச்சிகளும் கூட சிற்றோலையில் காணப்படும்.

• தனி ஒரு சிற்றோலையில் அதிகளவான மயிர்க்கொட்டிகள் உணவு உண்ணும் போது சிற்றோலைகள் முழுவதும் குழாய் போன்ற அறைகளால் மூடப்பட்ட நிலையிலிருக்கும்.

• முழு சிற்றோலையும் நரைநிறம் கலந்த கபிலமாகின்றது. பாரதூரமான தாக்கத்தின் போது இளம் காய்களுக்குத் தாக்கப்பட்டு அறைகள் போன்று காயின் மேற்பரப்பிலும் காணப்படும்.

• முதிர்ந்த அந்துக்கள் 12 மி.மீ நீளமும், சாம்பல் நரை நிறமும் கொண்டன. இவை முட்டையிட்டுப் பொரிக்கும். மயிர்க் கொட்டிகள் இளம் நிலைகளில் வெள்ளை நிற உடம்பும், கடும் கபில நிறத்தினையும் கொண்டிருக்கும்.

• குடம்பி பின்பு, ஓய்வு நிலைக்கு (கூட்டுப்புழு) மாறி அவற்றில் இருந்து அந்துக்கள் வெளிவருகின்றன.

• இதன் வாழ்க்கை வட்டம் 2- 21/2 மாதகாலமாகும்.

• தென்னோலைக்கு சேதம் விளைவிப்பது புழுப் போன்ற குடம்பிகளாகும்.
• இம்மயிர்க் கொட்டி 30-40 நாட்களின் பின்னர் கூட்டுப்புழுவாக விருத்தியடைகின்றது.

• இக் கூட்டுப்புழு பருவத்தினை புழுக் கூட்டுக்குள்ளேயே 14 – 21 நாட்களுக்கு நீடித்திருக்கின்றது.

• இதன் நிறைவுடலி 7 நாட்கள் வரை வாழும்.

• இதன் முழுமையான வாழ்க்கைச் சக்கரம் 2-21/2 மாதங்களாகும்.

வேறு ஒட்டுண்ணிகளும் உண்டு. இம்முறையால் தென்னை மயிர்க் கொட்டியின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

o இந்த ஒட்டுண்ணிகளை தென்னை ஆராட்சி நிலையம் லுணுவில இல் இருந்து தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

o இவ் விடங்களிலுள்ள பீடை மட்டத்தினை மதிப்பிட்ட பின்னர் மாத்திரமே இரை கௌவிகள் வழங்கப்படும்.

இரை கௌவிகளை தொற்றுக்குள்ளான மரங்களுக்கு அருகில் விட வேண்டும்.
குடம்பி ஒட்டுண்ணி – பிரகன் ஹிபேடர் எரிபோரஸ்
கூட்டுப்புழு ஒட்டுண்ணி – பிரக்கிமேரியா நெபன்ரிடிஸ்

ஒட்டுண்ணிப் பூச்சிகள் சோதனைக் குழாய்க்குள் அடைக்கப்பட்டு தபால் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஒட்டுண்ணிகளை மயிர்க்கொட்டி தாக்கமுள்ள இடத்திற்கு விடுவித்தல்.

 ஒட்டுண்ணிகள் கூடியளவு விரைவில் விடுவிக்கப்படல் வேண்டும்.

 மரம் ஏறுபவர் மரத்தின் வட்டுப்பகுதிக்கு குழாய்களைக் கொண்டு சென்று குழாயின் அடைப்பானை அகற்றி குழாயை ஓர் அளவு சரிக்கப்பட்டு ஓலை அடிப்பகுதியில் அரைவாசி பூச்சிகள் விழுமாறு குழாய் கட்டுப்படல் வேண்டும். அப்போது ஒட்டுண்ணி பீடையைத் தேடிப்பறந்து செல்லும். பின்பு குழாய் மூடப்பட்டு எஞ்சியுள்ள ஒட்டுண்ணிகளை வேறு மரத்தில் விடுவிக்கப்பட வேண்டும்.

 ஒட்டுண்ணிகள் ஒரு மரத்தில் இருந்து மற்றைய மரத்திற்கு பறந்து செல்லும் இயல்பு இருப்பதனால் பீடைகள் தாக்கப்பட்ட முழுப்பரப்பிலும் தெரிவு செய்யப்பட்ட மரங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும். மரத்திற்கு மரம் அதிகளவு இடைவெளி இருத்தல் வெண்டும்.

 மேலும் அனுப்பப்பட்ட ஒட்டுண்ணிகள் பெறப்பட்டவுடன் முன்னர் ஒட்டுண்ணிகள் விடுவிக்கப்படாத மரங்களில் விடுபட வேண்டும்.

 வெற்றுச் சோதனைக் குழாய்களை அடைப்பானுடன் தென்னை ஆராய்ச்சி நிலையம் லுணுவில இற்கு உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.

 ஒட்டுண்ணிகள் விடுபட்ட பின்பும் இரவில் தோட்டத்தில் நெருப்பு எரித்தல் கூடாது.

தென்னை மயிர்க்கொட்டியின் வாழ்க்கை வட்டம்.

பண்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல்.

குறைந்த குடித்தொகை மட்டத்தில் இப் பீடை இயற்கை எதிரிகளின் தாக்கத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும் ஒக்டோபரிலிருந்து பெப்பரவரி வரை பரம்பிக் காணப்படும். குறைந்த இரவு வெப்பநிலைகள் பிந்திய காலங்களில் இயற்கை எதிரிகளின் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் இயற்கை சமநிலைகளைக் குழப்பவும்பொருத்தமற்றதாகவும் இருக்கின்றது. இதனால் ஏற்படும் திடீர் பரவுகையினைத் தடுப்பதற்கு ஆரம்ப நிலையிலே இந் நோயினை இனங்காணுதல் வேண்டும்.

அ) பாதிப்பு மட்டம் குறைவாக இருந்தால் (30 மரங்களுக்குக் குறைவாகப் பாதிக்கப்பட்டால்) பாதிக்கப்பட்ட தென்னோலைகள் 5 – 6 ஐ வெட்டி எரிக்கவும்.
குறிப்பு:- 5 – 6 தென்னோலைகளுக்கு மேல் வெட்டக் கூடாது. நிறைவுடலிகள் தென்னோலைகளில் இருந்தால் தென்னோலைகளை 2 கிழமையின் பின்னரே வெட்ட வேண்டும்.

ஆ) பெருமளவு எண்ணிக்கையான மரங்கள் தொற்றுக்குள்ளாக்கப்பட்டிருந்தால், இப் பீடையினைக் கட்டுப்படுத்த ஆய்வுகூடத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட இரை கௌவிகளை தொடர்ச்சியாக வெளியிட வேண்டும்.

கட்டுப்பாட்டு முறைகள்.

ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்துவிடவும். மாலையில் நெருப்பு மூட்டி எரியவிட்டால், வெளிச்சத்தினால் கவரப்பட்டு அந்துக்கள் நெருப்பில் விழுந்து அழிந்துவிடும்.

இரசாயனக் கட்டுப்பாடு.

• 20 தென்னோலைகளுக்குக் கூட இம்மயிர்க் கொட்டி காணப்பட்டால் உடன் “உயிர்ப்புள்ள பூச்சி நாசினியை” அதாவது மொனோகுரோட்டோபஸ் ஐ உபயோகிக்கலாம். தாக்கப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் 8 மில்லிலீற்றர் மொனோகுரோட்டோபஸ் பூச்சிநாசினியை மரத்தின் தண்டுப்பகுதியில் நிலமட்டத்திலிருந்து 10 செ.மீ மேலே 450 சரிவில் துறப்பணத்தின உதவி கொண்டு ஒரு செ.மீ விட்டமுள்ளதும் 8 செ.மீ ஆழமுள்ளதுமான துவாரத்தினை ஏற்படுத்தி புனலின் உதவியுடன் அதனுள் விடவும் அல்லது 20 மார்சல் 4 மி.லீ உடன் ஒரு லீற்றர் நீர் கலந்து விசிறலாம்.

• 24 மணி நேரத்தின் பின்பு துவாரத்தினை சீமெந்து அல்லது தார் கொண்டு அடைக்கவும். 3-4 வாரத்தின் பின்பு, திரும்பவும் அவதானித்தால், மயிர்க்கொட்டிகள் காணப்படமாட்டாது. உயரமான மரங்களுக்கு பூச்சி நாசினியைத் தெளிக்க முடியாது. எனவே தான் உகந்த முறை இதுவாகும். தற்சமயம் மொனோகுரோட்டோபஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தென்னந் தோட்டங்களில் தென்னை மரத்தின் தண்டுக்கு உட்செலுத்துவதனைத் தவிர ஏனைய தேவைக்குப் பாவிக்கத் தடைசெய்யப்பட்டுள்ளது.

உயிரியல் கட்டுப்பாடு இரைகெளவிகளை தோட்டத்திலிருந்து விடுதல்.

தென்னை மயிர்கொட்டிக்கு இயற்கை எதிரிகள் (ஒட்டுண்ணிகள்) அனேகம் உண்டு. சில ஒட்டுண்ணிகள் மயிர்க்கொட்டிகள் மேல் தங்கள் முட்டைகளை இடும், இவ் முட்டைகளில் இருந்து விருத்தி அடையும் இனம் மயிர்க்கொட்டியை உணவாக உட்கொண்டு அழிக்கின்றன. தென்னை மயிர்க்கொட்டியின் முட்டை, கூட்டுப்புழு நிலைகளை தாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here