பெண்களின் சுய இன்பத்தால் என்ன பாதிப்பு?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்! 23


தி.மதன் (28)
கிளிநொச்சி

நான் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்தபோது சுயஇன்ப பழக்கம் ஏற்பட்டது. கடந்த எட்டு வருடங்களாக அதை விட முடியாமல் உள்ளது. எனக்கு இப்போது கைநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு பாரம்பரிய வைத்தியரை சந்தித்தபோது, அதிகப்படியான சுயஇன்பத்தால் நரம்புகள் தளர்ந்து விட்டதாக சொன்னார். இதனால் நான் திருமணத்தையும் தவிர்த்து வருகிறேன். திருமணம் செய்து கொள்வதெனில் என்ன சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த பிரச்சனையிலிருந்து நான் மீள வழிகள் உள்ளதா?

டாக்டர் ஞானப்பழம்: மதன்… உங்கள் நீண்ட கடிதம் படித்தேன். முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் நரம்புகள் பழுதாகிவிட்டனவா? திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், ஏதாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத்தான்.

சுயஇன்பம் என்ற ஆங்கில வார்த்தையை ‘மாஸ்ட்டர்பஷன்’ என்பர். சுயஇன்பம் என்பது செக்ஸ் ஆர்கனைத் தூண்டி, மகிழ்ச்சியை அனுபவிப்பது. பாலியல் தொடர்பான பெரும்பாலான தகவல்கள், செவி வழிச் செய்திகளால் தவறான வக்கிர உணர்வைத் தூண்டும் புத்தகங்களால், மூட நம்பிக்கைகளால் ஆனவை. உலகில் இல்லாத பாவத்தைச் செய்துவிட்டது போல் சம்பந்தப்பட்ட ஆணையும் பெண்ணையும் குற்ற உணர்வில் ஆழ்த்துவதற்கு அதுதான் காரணம்.

‘உலகில் 95 சதவிகிதம் பேர் சுய இன்பம் அனுபவிப்பவர்கள்தான். மீதம் ஐந்து சதவிகிதம் பேர் பொய் சொல்கிறார்கள்’ என்று புகழ் பெற்ற வாக்கியம் ஒன்று உண்டு. ஏறத்தாழ எல்லோரும் சுய இன்பப் பிரியர்கள்தான்.

மதன் பயப்படுவதைப் பார்த்தால், உலகில் உள்ள அனைவரும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். அதனால், மதன் தன் சுயஇன்பத்தால் நரம்புகள் தளர்ந்துவிட்டதாகப் பயப்படத் தேவை இல்லை. கண்ட கண்ட புத்தகங்களைப் படித்துவிட்டு, தவறானவர்களின் அறிவுரை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

கைநடுக்கம் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தீர்கள், கை நடுக்கம் ஏற்படுவதற்கு கல்சியம் பற்றாக்குறை, மனநோய், நரம்பியல் நோய்கள் போன்றவை காரணமாக இருக்கலாம். நிச்சயமாக சுய இன்பம் அனுபவிப்பது காரணம் அல்ல.

பலர் கேட்கும் கேள்வி- அதிகப்படியான சுயஇன்பத்தால் தீங்குள்ளதா என்பது. அதிகப்படியான என்பதற்கு என்ன அளவு எனத் தெரியவில்லை. சுய இன்பம் அனுபவிப்பதில் அதிகப்படி என்ன இருக்கிறது? வாரத்தில் ஒரு தடவையா, ஒரு நாளுக்கு ஒருதடவையா? இதை அதிகப்படி என அளப்பதற்கு கருவி ஒன்றும் இல்லை. இதில், விரும்பி இன்பம் அனுபவிப்பது அல்லது பழக்கம் காரணமாக ஈடுபடுவது என இரண்டு வகை உண்டு. எதுவாக இருப்பினும் தீங்கு விளைவது இல்லை.

ஆகவே சுய இன்பம் குறித்த தவறான அப்பிராயங்களை களைந்து விடுங்கள்

பெண்கள் கூட சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். கிளிடோரியஸைத் தேய்த்துக்கொடுப்பது, சில பெண்கள் தொடைகளுக்கு இடையே துணிகளையோ, தலையணையையோ வைத்து தேய்த்துக்கொள்வர். வெகு சிலர் வைபரேட்டர், டில்டோ போன்ற பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.

திருமணத்திற்கு முன்னர் சுய இன்பம் அனுபவிதத பெண்கள், திருமணத்தின் பின்னரும் அதே இன்பத்தை அனுபவிப்பதில்தான் சிக்கல் உள்ளது.

திருமணத்துக்கு முன் சுயஇன்பத்தால் உச்சநிலையை எட்டி இன்பம் துய்த்த பெண்கள், தங்கள் இணையுடன் அந்த சுகத்தை அடைய முடியாமல் ஏமாறுவது உண்டு. இணையுடன் இன்பம் துய்ப்பது என்பது சம்பந்தப்பட்ட இருவரின் மனநிலை, செக்ஸ் முன் விளையாட்டு போன்றவற்றோடு் தொடர்புடையது.”

எம்.சுபாஷ்,
கந்தர்மடம்

எனக்கு ஆணுறுப்பு சிறியதாக உள்ளது. அதை நீளமாக்குவதற்கு வழியுள்ளதா? இணையத்தளமொன்றில் படித்தபோது, வேக்கம் பம்ப்பை பயன்படுத்தினால் இந்த பிரச்சனையை சரியெல்லாமென படித்தேன். உண்மையா?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் வயதைக் குறிப்பிடாததால் பிரச்னையை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. வளர் இளம் பருவத்தில்தான் ஆணுறுப்பு முழுமையாக வளர்ச்சி அடையும். அதாவது 18 முதல் 20 வயதில். அதன் பிறகு, அதை நீளமாக்குவதற்கு எந்தப் பயிற்சியும் இல்லை. ஒரு வேளை உங்களுக்கு ஹார்மோன் சரிவிகிதத்தில் இல்லாத காரணத்தால், ஆண்குறி சின்னதாகக் காணப்பட்டால், போலி வைத்தியர்களிடம் செல்லாமல், நல்ல வைத்தியரை அணுகவும். ஹார்மோன் சரிவிகிதமாவதற்கு மருந்துகள் தருவார். இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம், பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

வேக்கம் பம்பு, விரைப்புத் தன்மைக்கானவையே தவிர, ஆண்குறியை நீளமாக்குவது அல்ல.

கடந்த பாகத்தை படிக்க: பெண்களின் சந்தேகங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here