‘திரும்பி வராதீர்கள், வந்தால் சுட்டு கொல்வோம்’: சொந்த நாட்டிலிருந்து வரும் எச்சரிக்கையால் நடுத்தெருவில் கொலம்பிய வீரர்கள்!

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் தோல்வியடைந்த கொலம்பிய அணி வீரர்கள் நாடு திரும்பினால் கொல்லப்படுவார்கள் என்று அந்த நாட்டு கால்பந்து ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கடைசி நொக் அவுட் போட்டியில் இங்கிலாந்து- கொலம்பிய அணிகள் மோதின. இந்த ஆட்டம் சமனிலையில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க மடியவில்லை. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வழங்கப்பட்டது

அப்போது இங்கிலாந்து அணியின் சார்பில் 4 கோல்கள் போடப்பட்டன. கொலம்பியா அணி சார்பில் 3 கோல்கள் மட்டுமே போடப்பட்டன. கொலம்பியா அணியைச் சேர்ந்த மத்யூஸ் உபிபே மற்றும் கார்லெஸ் பாக்கா ஆகியோர் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டனர்.

அணியின் தோல்விக்கு இந்த இரு வீரர்களுமே காரணம் என குற்றம்சுமத்தும் கொலம்பிய ரசிகர்கள் பலரும், இருவருக்கும் எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருவரும் சொந்த நாடு திரும்ப தேவையில்லை, அப்படி திரும்பினால் நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர்.

இதனால் கொலம்பியா அணி கால்பந்தாட்ட வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். முன்னதாக கடந்த 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்னப் போட்டியின் போது மொஸ்கோ எஸ்கோபர் என்ற வீரர் அடித்த ஒன் கோலே அணியின் தோல்விக்கு காரணம் எனக்கூறி, ரசிகர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here