பாம்பை விரட்டி விரட்டித் தாக்கிக் கொன்ற எலி! -(VIDEO)

வழக்கமாக பாம்பு, எலியை சாப்பாடும். ஆனால் எலி ஒன்று பாம்பை விழுங்கிய சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது. காங்டாங் மாநிலத்தின் உள்ள புனிங் என்னும் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

முதலில் இந்தச் சம்பவத்தை பார்த்த அதிர்ந்து போன கிராமத்தினர் பின்னர் அதனை வீடியோ எடுத்துள்ளனர். பாம்பு ஒன்றை தாக்கி காயப்படுத்தியது எலி. வெகு நேரமாக அந்த எலியோடு போராடியது பாம்பு.

பாம்பை பல இடங்களில் கடித்த எலி, ஒரு கட்டத்திற்கு மேல் பாம்பின் வாயை கவ்வியபடி புதருக்குள் இழுத்து சென்றது. அப்பாம்பு விஷத்தன்மை உடையதா? என்பது குறித்து அறிய முடியவில்லை என்றனர் கிராமத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here