விம்பிள்டன் டென்னிஸ்: ஷரபோவா தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வி கண்டு வெளியேறி னார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவும், சக நாட்டு வீராங்கனை விடாலியா டயட்சென்கோவும் மோதினர்.

விடாலியா டயட்சென்கோ 6-7 (3/7) 7-6 (7/3) 6-4 என்ற செட் கணக்கில் மரியா ஷரபோவாவை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவாவும், பெலாரஸின் அலியாக்சான்ட்ரா சாஸ்னோவிச்சும் மோதினர். இதில் சாஸ்னோவிச் 6-4 4-6 6-0 என்ற செட் கணக்கில் குவிட்டோவாவை வீழ்த்தினார்.

சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் 7-6 (7/2) 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்சியாவைச் சாய்த்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றார். அவர் 6-3 6-3 6-2 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் துடி செலாவை தோற்கடித்தார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3 6-1 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சான்ட்கிரென்னை வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here