காதலர் தினத்தில் சோகம்: விபத்தில் சிக்கிய புதுமணத் தம்பதி; மனைவி உயிரிழப்பு!


வ்வுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு நாளில் இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது
கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் வவுனியா முருகனூரை சேர்ந்த தர்சினி (25) என்ற பெண்ணே சாவடைந்துள்ளார். கணவரான கலைச்செல்வன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் நடைபெற்றிருந்தது.

விபத்து தொடர்பாக சிதம்பரபுரம் போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here