உதயங்க கைது!

இன்று அதிகாலை நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடியா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டிருந்தது.

2016.10.20 ஆம் திகதி அப்போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்றவியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ் உதயங்க வீரதுங்கவை, சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வி­யுடன் கைதுசெய்­வ­தற்­கான சிவப்பு அறி­வித்தல், பிடி­யா­ணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று இலங்கை வந்தடைந்த நிலையில் விசாரணைகளின் பின் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here