சின்னம் குறித்து இன்று இறுதிப் பேச்சு!

யானைச் சின்னத்தில் போட்டியிடுவதா, இதயம் சின்னத்தில் போட்டியிடுவதா என்பதை தீர்மானிக்கும் இறுதி பேச்சு இன்று, ரணில்- சஜித் தரப்புக்களிற்கிடையில் நடைபெறவுள்ளது.

இரு தரப்பிலும் தலா ஐவர் கொண்ட குழு இன்று பிற்பகல் பேச்சில் ஈடுபடவுள்ளது.

யானைச் சின்னத்தில் களமிறங்க ரணில் தரப்பு வலியுறுத்த, இதயம் சின்னத்தில் களமிறங்க சஜித் தரப்பு அழுத்தம் கொடுக்கிறது. யானை சின்னத்தில் களமிறங்க தயாரென்றும், எனினும், அதனை தமது கூட்டணியின் சின்னமாகவே பாவிக்க அவர் வலியுறுத்தினார்.

இரு தரப்பின் முடிவற்ற குழப்பத்தால் கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ளது. இன்றைய தினத்துடன் சின்னம் குறிதது உறுதியான முடிவெடுத்து, இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும்படி அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இன்றைய சந்திப்பிந்கு முன்னோடியாக, கட்சியின் எம்.பிக்களை இன்று காலையில் சந்திக்க சஜித் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here