கொரோனா உயிரிழப்பு 1,483 ஆக அதிகரிப்பு!

வியட்நாமில் தனிமைப்படுத்தப்பட்ட இடம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேற்று மட்டும் சீனாவில் 116 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், மொத்த உயிரிழப்பு 1,483 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் -19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் அடையாளம் காணப்பட்டது. இன்று வரை கட்டுப்படுத்த முடியாமல் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனாவினால், வுஹானிலேயே நேற்றைய இறப்புக்கள் பதிவாகின.

அதேவேளை, கொரோனா தாக்கினால் மேலும் 4,823 பேர் புதிதான நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,986 ஆக அதிகரித்துள்ளது.

குறைந்தது 25 நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளன.  சீனாவிற்கு வெளியே மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. ஒன்று ஹொங்கொங்கில் ஒன்று பிலிப்பைன்ஸிலும், ஜப்பானில் ஒன்றும் பதிவாகியுள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த வைரஸ் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. வைரஸ் “எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் விட சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு வடமேற்கே 10,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு பகுதி பிற இடங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே தனிமைப்படுத்த உத்தரவிட்ட முதல் இடமாக இது திகழ்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here