போதையில் வரும் கணவனை திருத்த தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிய இளம்பெண் தீப்பற்றிச்சாவு!

தனது கணவனை அச்சுறுத்துவதற்காக மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட பெண் தவறுதலாக தீப்பற்றியதில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணாண விதுஜா (21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தினமும் போதையில் வரும் கணவனை திருத்துவதற்காக கடந்த 8ம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தன்னைத்தானே தீவைக்கப் போவதை போல பாவனை பண்ணியுள்ளார். இதன்போது, தவறுதலாக அவர் தீப்பற்றியதில், படுகாயமடைந்தார்.

அவரை உடனடியாக மீட்பு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here