சிங்கமலையில் ஹெலிகொப்டர் மூலம் தீ அணைக்கும் நடவடிக்கை

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

நேற்று காலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் கிட்டதட்ட 5 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக அட்டன் பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

ஆனால் நேற்று மாலையும் குறித்த காட்டுப்பகுதியில் தீ பரவிய வண்ணமே காணப்பட்டது.

தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here