கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இம்ரான் எம்.பி!

கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் தனது கடமைகளை இன்று (5) பொறுப்பேற்றுக் கொண்டார். கல்வி அமைச்சில் சர்வமத வழிபாடுகளுடன் கடமைகளை பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here