டொரண்டோவை உலுக்கிய தொடர் கொள்ளையர்கள் கைது: ஐவரும் 18 வயதிற்கும் குறைந்தவர்கள்!

டொரண்டோ மற்றும் மிசிசாகாவில் நடந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐந்து பேரை பீல் பிராந்திய பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி, முகமூடி அணிந்து, கையில் துப்பாக்கியுடன் வந்தவர்கள் பிரம்ப்டனில் ஒரு வெள்ளை கியா ஃபோர்டைத் திருடி டொராண்டோவில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றனர். எனினும், கட்டிடத்தின் பூட்டுக்களை அவர்களால் உடைக்க முடியவில்லை.

மறுநாள், முகமூடி அணிந்த அதே கும்பல் மிசிசாகாவில் ஒரு வங்கியைக் கொள்ளையடித்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி பெருமளவு பணத்தை கொள்ளையிட்டனர்.

இந் கொள்ளைச் சம்பவம் முடிந்ததும், மிசிசாகாவில் உள்ள ஒரு கடையிலும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 18 வயதிற்கும் குறைந்தவர்கள்.

பிராம்ப்டனைச் சேர்ந்த 18 வயது இளைஞர்கள் இருவர், டொராண்டோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிசிசாகாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், டொராண்டோவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளனர். கொள்ளை, திருடப்பட்ட சொத்தை வைத்திருத்தல் மற்றும் ஆபத்தான நோக்கங்களுக்காக ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் தொடர்பாக தகவல்கள் இருப்பில் மத்திய கொள்ளை பணியகத்தை (905)453-2121 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here