பதவியை துறந்தார் விஜயகலா: தமிழ்மக்களிற்காக தியாகம் செய்தாராம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இரவு நடத்திய சந்திப்பை தொடர்ந்து, தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்க விஜயகலா மகேஸ்வரன் தீர்மானித்துள்ளார். இந்த தகவலை சற்று முன்னர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.

“நேற்றைய சந்திப்பில் பிரதமர் உங்களை பதவிவிலகியிருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக தகவல் வந்ததே? அது உண்மையா?“ என தமிழ்பக்கம் சற்று முன்னர் விஜயகலாவிடம் கேள்வியெழுப்பியிருந்தது.

“நேற்று மாலை பிரதமரை சந்தித்து, யாழ்ப்பாண உரை தொடர்பாக விளக்கம் அளித்தேன். சபாநாயகர் ஊடாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை பிரதமர் தெளிவுபடுத்தினார். எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். தமிழ் மக்களிற்காக நான் எனது பதவியை தியாகம் செய்ய தயங்கப்போவதில்லை. இப்பொழுதும் அதையே செய்கிறேன்“ என்றார்.

“அமைச்சிலிருந்து நிரந்தரமாக விலகுகிறீர்களா? விசாரணை முடியும் வரை தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறீர்களா?“ என தமிழ் பக்கம் வினவியது.

“நான் பதவிகளிற்காக அரசியலுக்கு வரவில்லை. நான் தேவையா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here