பல்கலை மாணவன் வீட்டை நாமே தாக்கினோம்; பகிடிவதையில் ஈடுபட்டால் தாக்குதல் தொடரும்: ஆவா அதிரடி அறிவிப்பு!


பகிடிவதையில் ஈடுபட்ட விவகாரத்தில் அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவன் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு உரிமை கோரியுள்ளது. அத்துடன், பகிடிவதையில் ஈடுபடுபவர்களின் மீது தமது தாக்குதல் தொடருமென்றும் எச்சரித்துள்ளது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய கிளிநொச்சி தொழில்நுட்பபீட பகிடிவதை விவகாரத்தின் விசாரணை நடவடிக்கைகளிற்காக சில மாணவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில் மானிப்பால், ஆனைக்கோட்டை பகுதி மாணவனும் உள்ளடக்கம்.

அந்த மாணவனின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற நான்கு மர்மநபர்கள், அவரை பெயர் சொல்லி அழைத்துள்ளனர். எனினும், அவர் வீட்டில் இல்லையென்றதும், வீட்டுக்குள் புகுந்து சொத்துக்களை சேதப்படுத்தினர். கார் ஒன்று உடைக்கப்பட்டதுடன், வீட்டிலிருந்த பொருட்களும் உடைக்கப்பட்டன.

சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்,  ஆவா குழு என குறிப்பிடும் இளைஞர்களின் முகப்புத்தகங்களில் அந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளனர்.

தமிழர்கள் அடையாளமாக காணப்படும் பல்கலைக்கழகத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கு எதிராகவும் எமது நடவடிக்கைகள் இடம்பெறும். அந்தவகையில் மாணவிகளிற்கு எதிராக பகிடிவதையென்ற பெயரில் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எமது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பகிடிவதை என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தும் பட்சத்தில் இதுபோன்ற தண்டனை இனி வரும் காலங்களில் தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here