கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரேநாளில் 242 பேர் பலி!

சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ யும் கடந்துள்ளது. நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புக்கள் தினமும் அதிகரித்து வருவது சீன அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நான்கு தினங்களாக நாளாந்த உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணமே செல்கிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயிலேயே 242 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

நேற்றைய 24 மணி நேரத்தில் 14,840 பேர் புதிதாக நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here