என்ன கொடுமை?: ட்ரம்பின் முக வடிவில் போதை மாத்திரை!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பின் படத்தை தங்கள் சட்ட விரோதப் பொருள்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சில நேரங்களில் தனிப்பட்ட வடிவத்தில் அல்லது குறிப்பிட்ட நிறமுள்ள போதை மருந்துகளை மார்க்கெட்டில் நுட்பமாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இண்டியானா மாநில போலீசார் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அதிபர் டொனால்ட் டிரம்பின் முக வடிவிலான எக்ஸ்டாசி போதை மாத்திரைகளைக் கைப்பற்றினர்.

போலீசாரின் இச்சோதனையில் 129 போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆரஞ்சு நிற முகவடிவில் இருந்ததாகவும் அதில் “மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்” என்று எழுதப் பட்டிருந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிபர் டிரம்பின் முகவடிவில் போதை மாத்திரைகள் இருந்தால், விற்பனை அதிகரிக்கும் என்று கடத்தல்காரர்கள் எண்ணியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here