திடீரென்று பெய்த இரத்த மழை! இறுதி நாட்களின் அறிகுறியா?

ரஷ்யாவில் திடீரென்று பெய்த இரத்த மழையால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சைபீரியாவில் உள்ள ஆர்டிக் பகுதியிலே இந்த சிவப்பு வண்ண மழை பெய்துள்ளது.

உள்ளூர் மக்கள் இதை பையில் காலத்துடன் ஒப்பிட்டு இறுதி நாட்கள் நெருங்கியதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றெல்லாம் ஆருடங்களை ஊடகங்களில் உலவவிட்டுள்ளனர்.

நோரில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையின் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களும் இரத்த மழையால் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கின்றன.  ஆனால் சிலர் அதிகரித்து வரும் இரசாயன ஆலைக் கழிவுகளால் தான் சிவப்பு மழை பெய்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நோர்நிக்கல் இரசாயன ஆலை உரிமையாளர், தங்களின் ஆலையில் இருந்து எவ்வித நச்சும் வெளியேறுவதில்லை எனவும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கும் எந்த நடவடிக்கை தாங்கள் ஈடுபடுவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், திடீரென்று பெய்த சிவப்பு மழைக்கான காரணம் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இறுதி நாள்கள் நெருங்கி விட்டன என்பது போன்ற பைபிள் கால அனுமானங்களை பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here