அனிருத் இசையில் மீண்டும் பாடியுள்ள விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இருக்கும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் இணையதளத்தை சூறையாடி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவு வைரல் ஆனது.

இந்நிலையில் விஜய் வெறித்தனமாக சண்டை போடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை உச்சத்தை தொட்டுள்ளது. இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் உண்மையாகவே வெறித்தனமாக வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

மாஸ்டர் படத்தை சிங்கிள் பாடல் காதலர் தினமான பெப்ரவரி 14 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். தற்போது கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் அனிருத் இசையில் தளபதி விஜய் ஒரு குட்டி கதை பாடலை பாடி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here