பிள்ளைகளை மீட்க கடலில் மூழ்கிய தமிழ்பெண்: அமெரிக்காவில் சோகம்!

அமெரிக்காவில் தனது 3 குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த இரு குழந்தைகளின் தாயான ஆர்த்தி குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு தான், உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது,

கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் ஆர்த்தி செந்தில்வேல், தனது குடும்பத்தினருடன் கோவெல் ரேஞ்ச் ஸ்டேட் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்.

ஆர்த்தி தனது 3 பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பெரிய அலை ஒன்று பிள்ளைகளை இழுத்துச் சென்றது.

முன்பின் யோசிக்காத ஆர்த்தி, தனக்கு பெரிய அளவில் நீச்சல் தெரியாது என்பதையும் யோசிக்காமல் கடலுக்குள் பாய்ந்தார். அதற்குள் அவரது உறவினர்கள் அனைவரும் மனித சங்கிலி போல் வரிசையாக நின்று குழந்தைகளை மீட்டனர்.

ஆனால், அதற்குள் ஆர்த்தி கடலில் மூழ்கினார். அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சிறிது நேரத்திற்குள் அலை ஒன்று அவரை கரைக்குக் கொண்டு வந்தது.

அவருக்கு உயிர் மீட்கும் முதலுதவி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் அவரை காப்பாற்ற இயலவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கலிபோர்னியா போலீஸ் அதிகாரிகள், இக்கடற்கரை பகுதியில் அலைகள் ஆபத்தானவை என்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு நினைவூட்டி வருவதாகத் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here