மாப்பிள்ளை, மணப்பெண் வீடியோ கோலில்… ஸ்மார்ட் போன்களிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! (VIDEO)


தொழில்நுட்ப வளர்ச்சியினால் குடும்பங்களிற்குள் இடைவெளி அதிகரிக்கிறது, மனிதர்கள் சக மனிதர்களை பற்றி யோசிக்கிறார்கள் இல்லையென்றெல்லாம் பலவாறாக அபிப்பிராயங்கள் அதிகரித்து வருகின்றன.

அதில் முக்கியமானது ஸ்மார்ட் போன்கள். ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் ஸ்மார்ட் போனுடன் தனித்தனி உலகங்களாக குடும்ப உறுப்பினர்களே இருக்கிறார்கள், வீட்டில் என்ன சாப்பாடு என்பதை ஸ்மார்ட் போனை பார்த்தே தெரிந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் பரவாயில்லையென்பதை போன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

ஸ்மார்ட் போனின் வீடியோ கோலிலேயே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சுவாரஸ்ய சம்பவமொன்று நடந்துள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் ஒருவருக்கும், இளைஞருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமண நிச்சயதார்த்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வர மனமக்களால் முடியவில்லை. இதனால் ஸ்மார்ட் போனிலேயே அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பெண்ணும் இளைஞரும் வீடியோ கோலில் இருக்க, சடங்குகள் செய்யப்பட்டு பெண் நெற்றியில் குங்குமம் இடுவதற்கு பதில் செல்போனில் பொட்டு வைத்து, அதற்கு பட்டுப்புடவையைப் போர்த்தி நலங்கு வைக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்த நவீன டெக்னோலஜி நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறகென்ன, வழக்கம் போல இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here