புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் இல்லை; ஏனெனில் புலிகளே அனைத்து குற்றங்களையும் செய்தனர்: ராஜித குதர்க்கம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் குற்றச்செயல்கள் நடக்கவில்லையென திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறியமை ஒருவகையில் சரிதான். புலிகளின் காலத்தில் அனைத்து குற்றங்களையும் அவர்களே செய்தனர். ஏனையவர்கள் பயத்தால் எதையும் செய்யவில்லை. அதனால் அப்படியான நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அந்த நிலைமையில்லை. மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரம் இருக்கிறபோது குற்றச்செயல்களும் அதிகரிக்கும். இவ்வாறு அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இப்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது- நாங்கள் ஹிட்லரை ஊக்குவிப்பதையும் நிராகரிக்கிறோம். பிரபாகரனை ஊக்குவிப்பதையும் நிராகரிக்கிறோம். ஆனால் தெற்கில் சிலர் விஜயகலா பிரபாகரனை பற்றி பேசியதும் கொந்தளிக்கிறார்கள். அதேபோல, ஹிட்லர் பற்றி பேசியபோது மௌனமாக இருக்கிறார்கள்.

தமிழர் என்ற காரணத்தினால், இப்படி எதையாவது கூறினால், அதை பிரச்சனையாக்குவது சரியா?

விஜயகலா வடக்கிற்கு அரச எதையும் செய்யவில்லையென்று கூறவில்லை. வடக்கில் பல பிரச்சனைகள் உள்ளன. அதை நாம் ஏற்க வேண்டும். அதனால் மனநிலை தாக்கம் வரலாம். மனநிலை தாக்கம் வருகிறது என்பதற்காக இவ்வாறு பேச முடியாது. அதை கூறி இந்த கூற்றை நியாயப்படுத்த முடியாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here