ஒஸ்கார் விருது வென்ற படம் விஜய் படத்தின் கொப்பியாம்!

சர்வதேச அளவில் வழங்கப்படும் உயரிய ஒஸ்கார் விருதை கொரிய படமான ‘பரசைட்’ தட்டி சென்றுள்ளது.

ஒஸ்கார் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம் சிறந்த படத்துக்கான விருதை பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன் பணக்கார வீட்டில் வேலைக்கு சேர்கிறான். பின்னர் அந்த குடும்பத்தினரை ஏமாற்றி தனது தாய், தந்தை, தங்கையை அங்கு வேலைக்கு சேர்த்து தில்லுமுல்லு செய்வது போன்ற கதைக்களத்தில் இந்த படம் தயாராகி உள்ளது.

இந்த நிலையில் பரசைட் படம் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தின் கொப்பி என்று சமூக வலைத் தளத்தில் சிலர் எழுதி வருகிறார்கள்.

1999ல் வெளியான மின்சார கண்ணா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். ரம்பா, குஷ்பு, மோனிகா கோஸ்டலினோ ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பரசைட், மின்சார கண்ணா ஆகிய 2 படங்களின் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சில விஜய் ரசிகர்கள், மின்சார கண்ணாவின் கொப்பி படத்துக்கு ஒஸ்கார் விருது வழங்கி இருப்பதாக கொஞ்சமல்ல, நிறைய ஓவராக பதிவிட்டுமுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here