ரொக்கின் மகளும் WWE போட்டிகளில் அறிமுகமானார்!

பிரபல WWE மல்யுத்த வீரரும், ஹொலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜோன்சனின் (த ரொக்) மகளான சிமோன் ஜோன்சன் தந்தையின் அடியொற்றி மல்யுத்தக் களத்தில் புகுந்துள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ட்வெய்ன் ஜோன்சன். WWE என்னும் (உலக மல்யுத்த பொழுதுபோக்கு) அமைப்பின் போட்டிகளில் சாம்பியன் ஆக விளங்கியவர். தனது தனித்துவமான ஆட்டத்தால் ரசிகர்களால் “ரொக்” எனும் பட்டப்பெயரால் புகழ்பெற்றவர். மல்யுத்த களத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் தொடர்ந்து ஹொலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரது முதல் மனைவியான டேனி கார்சியா மூலமாகப் பிறந்தவர் சிமோன் ஜோன்சன். இவருக்கு தற்போது 18 வயதாகிறது.

இந்நிலையில் ட்வெய்ன் ஜாஜோன்சனின் மகளான சிமோன் ஜான்சன் தந்தையின் அடியொற்றி மல்யுத்தக் களத்தில் புகுந்துள்ளார்.

இதுதொடர்பான ஒப்பந்தம் குறித்த விபரத்தை WWE அமைப்பு திங்களன்று வெளியிட்டுள்ளது. அதேபோல் சிமோன் அந்த அமைப்பிற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது குடும்பத்திற்கு மல்யுத்தத்துடன் இருக்கும் தொடர்பு தொடர்ந்து வருகிறது என்பதை உணர்வது எனக்கு அத்தனை முக்கியமான விஷயம். தற்போது அதனைத் தொடர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மல்யுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல; ஒரு பெரிய பாரம்பரியத்தை தொடர்வதற்கும்தான்’ என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் சிமோனின் பெற்றோர்கள் இருவரும் அவரைப் பாராட்டி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சிமோனின் தந்தை ட்வெய்ன் ஜோன்சன், அவரது தந்தை ராக்கி ஜோன்சன் மற்றும் ராக்கி ஜான்சனின் தந்தை பீட்டர் மைவியா ஆகிய மூவருமே புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள். அந்த வரிசையில் ஒரு புகழ்பெற்ற தலைமுறையின் நானகாவது வாரிசாக சிமோன் தற்போது களம் காண்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here