எழுத்தாளர் சியாபோபா மனைவியை விடுவிக்க கோரி ஐ.நா உத்தரவு!

சீனாவின் பிரபல எழுத்தாளர் லியு சியாபோவின் மனைவியை வீட்டு காவலில் இருந்து விடுதலை செய்யுமாறு, அந்நாட்டு அரசுக்கு ஜ.நா. மனித உரிமை சபை உத்தரவிட்டுள்ளது.

குறித்த எழுத்தாளர் மரணமடைந்துள்ள நிலையிலும், அவரின் மனைவி இற்றைவரை வீட்டுக்காவலில் உள்ளதாகவும், அவர் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறி, ஜ.நா.சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க இன்று ஜ.நா மனித உரிமை சபை மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான, 61 வயதுடைய லியு சியாபோ என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.

இதேவேளை, கடந்த 2010 ஆம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நோர்வே நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமீபத்தில்தான் சீரடைந்தது.

இதற்கிடையே, ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு சியாபோ பரோலில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டது.

ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லியு சியாபோஇ கடந்த ஆண்டு 13 ஆம் திகதி 7 ஆம் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணத்துக்கு பின்னர் லியு சியாபோவின் மனைவி லியு கிசியா-வை சீன அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

எழுதாளர் மனைவியின் கைத்தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், சந்திக்க விரும்பும் நபர்களை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண் இவ்வாறு அரசின் செயற்பாடுகளினால் மன உழசை;சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறி ஐ.நா.வின் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து இன்று சீனா அரசிற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here