யாழில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: அழகியும், ஆணும் சிக்கினர்!


யாழில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள இராசம்மா திருமண மண்டபத்துக்கு முன்னதாக உள்ள இராசம்மா விடுதியில் அண்மைக்காலமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பிரதேச செயலக கலாச்சார பிரிவுக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாச்சாரஉத்தியோகர்கள் மற்றும் அப்பகுதி கிராம அலுவலர்கள் குறித்த விடுதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியபோது விடுதிக்குள் அறைக்குள் தம்பதிகளாக இருந்த இருவர் கலாச்சார உத்தியோகத்தர்களால் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

பிடிபட்டவர்கள் தாங்கள் திருமணமாகியதாகவும் எனினும் பதிவு திருமணம் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்கள்.

அதில் ஒருவர் சாட்டியினை வசிப்பிடமாகவும் மற்றையவர் வெளி மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனினும் யாழ்ப்பாண பிரதேச செயலர் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here