உச்சீதிமன்றின் தீர்ப்பு தமிழகத்திற்கும் பயன் கொடுக்குமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிக்கே அதிகாரம் அதிகளவில் இருப்பதாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) வழங்கப்பட்ட இத்தீர்ப்பில், துணை நிலை ஆளுநருக்குகென எந்த அதிகாரமும் தனியாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி இடம்பெறும் நிலையில், அரவிந் ஹெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இந்நிலையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிர்வாகத்தில், துணை நிலை ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து, மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டது.

அதனையடுத்து டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையேல் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என வினவி, ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளதாக கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, குறித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வரும் நிலையில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளதென்றும், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதென, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மாநில ஆட்சியே முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.எனினும் தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில், முதல்வரை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் வழங்கப்படுவதாக, அண்மைக்காலமாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

தமிழகத்திலும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர், ஆட்சிப் பீடம் ஏறியுள்ள முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு, மத்திய அரசுக்கு எடுபிடியாக செயற்படுவதாகவும், இதனால் ஆளுநருக்கு அதிகாரம் அதிகளவில் சென்று கொண்டிருப்பதாகவும், மாநிலத்தின் உரிமை பறிபோவதாகவும், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றன.

இவ்வாறான நிலையில், இன்று வழங்கப்பட்ட குறித்த தீர்ப்பானது பல்வேறு மாநிலங்களுக்கும் பிரதிபலிப்பதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here