பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை: மாணவர், மாணவியரை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை விற்கும் பலே ஆசாமி!


ஒன்லைன் மூலம் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவு நடத்திய விசாரணைகளிலிருந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்ட 21 வயதான சந்தேகநபர் கணனித் துறையில் பணியாற்றி வரும் ஒருவர் என்பதோடு, அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தளம் மூலம் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரபலமான பாடசாலைகளிலுள்ள மாணவர்களை இரவு வேளைகளில், சமூக வலைத்தளங்களில் போலியாக தயாரிக்கப்பட்ட WhatsApp, Instagram, Facebook, Snapchat போன்ற கணக்குகளின் ஊடாக, பெண்களைப் போன்று அல்லது ஆண்களைப் போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மாணவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.

அத்துடன் அச்சிறுவர்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று பின்னர் அவற்றை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆபாச இணையத்தளங்களுக்கு வழங்குவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எனவே, இவ்வாறான இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என, சிறுவர்கள் உட்பட சமூகத்திலுள்ள அனைவரையும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் தங்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் அட்டைகளை பயன்படுத்தி வேறொரு நபருக்கு சிம் அட்டைகளை வழங்குதல், தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் மூலம் இணையத்தில் சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட WhatsApp, Instagram, Facebook, Snapchat போன்றவற்றின் கணக்குகளின் கடவுச்சொல்லை வேறு நபர்களுக்கு கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.

அவ்வாறு செய்வதன் மூலம், குற்றவாளிகள் அந்த தகவலை எளிதில் பயன்படுத்தி, இதுபோன்ற சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை பரவலாக மேற்கொள்கின்றமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த குற்றவாளிகளுக்கு சட்டத்தை நடைமுறைமுறைப்படுத்தும் வேளையில், அதனுடன் தொடர்புபட்ட ஏனைய தரப்பினரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதால் இவ்வாறான கணக்குகளை பயன்படுத்தும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும், இக்கணக்குகள் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டாம் எனவும், விசேடமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் இவ்வாறான நிலைக்கு ஆளாவதிலிருந்து தடுப்பதற்காக, சிறுவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருந்து, அவர்களை உரிய முறையில் பார்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here