தெலுங்கிலும் தெறிக்கவிடும் மக்கள் செல்வன்

மக்கள் செல்வன் ஹீரோ என்பது மட்டுமன்றி கதாபத்திரம் பிடிக்கும் பட்சத்தில் நடிக்கும் மனிதர். ஏற்கனவே மாதவன், ரஜினி போன்றவர்களுக்கு வில்லனாக தமிழில் நடித்தார். தற்பொழுது விஜய்க்கும் வில்லன் ஆகிவிட்டார் மாஸ்டர் வாயிலாக.

விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா என்ற நிலையை கடந்துவிட்டார். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன், மலையாள சினிமாவில் ஜெயராமுடன் நடித்துவிட்டார். விரைவில் ஹிந்தியில் அமீர் கானுடன் என கலக்கிய வருகிறார்.

தெலுங்கில் “உப்பேன்னா” என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். பஞ்சா வைஷ்ணவ தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்தை புச்சி பாபு சனா எழுதி இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் சேது “ராயணம்” என்ற ரோலில் நடிக்கிறார்.

இவரின் கெட் அப் போட்டோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here