நிர்வாணமாக நடிப்பதை பெருமையாக பேசிய ராசி கண்ணா

தென்னிந்திய சினிமாவில் இது நடிகைகள் நிர்வாணமாக நடிக்க வேண்டிய சீசன் போல. தொடர்ந்து பல படங்களில் நடிகைகள் நிர்வாணமாக நடித்து வருகின்றனர். இன்று யார் வேண்டுமானாலும் நிர்வாணமாக நடிக்கலாம், ஆனால் அதற்கு விதை போட்டவர் நம் அமலாபால் தான்.

ஆனால் தற்போது சற்றும் எதிர்பாராத விதமாக நடிகை ராசி கண்ணா வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. வதந்தி என நினைத்துக் கொண்டிருக்கையில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டிரைலரின் முதல் காட்சியிலேயே ராசி கண்ணா நிர்வாணமாக குளிப்பது போன்ற காட்சி இருந்தது.

இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விஜய் தேவர் கொண்டாவுடன் ஏகப்பட்ட உதட்டு முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார். இதனை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்டபோது அதற்கு ஏடாகூடமாக விளக்கம் கொடுத்துள்ளார் நம் ராசி கண்ணா.

அவர் கூறியதாவது, படத்தின் காட்சிக்கு தேவை கருதியே நிர்வாணமாக நடித்ததாகவும், மேலும் முத்த காட்சிகள் ஒரு படத்திற்கு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய ராசி கண்ணா, முத்தக் காட்சிகளை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் எனவும் காமத்துடன் பார்க்க வேண்டாம் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேற்கொண்டு யாரையும் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி நடிக்க வில்லை எனவும் படம் வெளிவந்த பிறகு அந்த காட்சியில் நடித்ததன் காரணம் உங்களுக்கு விளங்கும் எனவும் பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.

ராசி கண்ணா தெலுங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here