ஈ.பி.டி.பி இற்கு சிக்கல்; மாநகரசபை ஊழல் அறிக்கை பற்றிய பிரிந்துரை முதல்வரிடம்: அடுத்தவாரம் பகிரங்கமாகலாம்?

யாழ் மாநகரசபையை ஈ.பி.டி.பி நிர்வகித்த காலத்தில் நடந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்படி முதலமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வாரத்தில் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கைகள் பகிரங்கமானலாமென தமிழ்பக்கம் அறந்துள்ளது.

யாழ் மாநகரசபையை ஈ.பி.டி.பி நிர்வகித்த சமயத்தில் பெருமளவு மோசடிகள் நடந்ததாக குற்றம்சுமத்தப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரியரட்ணம், வசந்தசேனன் தலைமையில் இரண்டு விசாரணைக்குழுக்களை முதலமைச்சர் நியமித்திருந்தார். இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார்.

இரண்டு விசாரணைக்குழுக்களின் விசாரணையும் முடிந்து, முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் மீது, எப்படியான மேல் நடவடிக்கை எடுப்பதென ஆராய குழுவொன்றை நியமித்திருந்தார். அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயட்சுமி, முதலமைச்சரின் செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளடங்கிய குழுவினர், தமது பரிந்துரையை இறுதிசெய்து நேற்று முதலமைச்சரிடம் கையளித்தனர் என்பதை தமிழ் பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

இதிலேயே, நீதிமன்றத்தை நாடும்படி பரிந்துரைத்துள்ளது. அத்துடன், நீதிபதிகளின் விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்தும்படியும் கோரப்பட்டுள்ளது.

இதனால் வரும் 10ம் திகதி வடமாகாணசபை அமர்வின்போது, அறிக்கை பகிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அறிக்கை அன்றையதினம் பகிரங்கப்படுத்தப்படா விட்டாலும், பரிந்துரை சபையில் பகிரங்கப்படுத்தப்படும் என தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

இரண்டு நீதிபதிகள் அறிக்கையில் முன்னைய ஈ.பி.டி.பி நிர்வாகம் மீது வலுவான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here